2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

அவசர அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?

Freelancer   / 2024 ஜூலை 24 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை (24) அவசரமா கூடிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு  இதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, இந்த இடைக்கால உத்தரவின் போது சட்டத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .