2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை

Simrith   / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 7 பேர் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாக சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் நிலைமையை மதிப்பீடு செய்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், விவசாய விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி மற்றும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆகியோருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .