2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

Editorial   / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி, பேஸ்லைன் வீதியில் காரை மோதி நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .