2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

அரசியலமைப்பை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?

Simrith   / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பில் பிரதமர் அமரசூரிய அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அமைச்சரவை செயல்படுவதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் முக்கியம் என்கிறார். அரசியலமைப்பை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்? என்று ரணில் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவையே தேசத்தை நிர்வகிப்பதாகவும், அரசியலமைப்பில் எந்த இடத்திலும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை என்று குறிப்பிடவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

"நீங்கள் அரசியலமைப்பைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் உங்களுக்கு உதவுவேன், இல்லையெனில் நான் நமது முன்னாள் பிரதமரிடம் சொல்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். 

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன, வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் பணிப்பாளர் ஜூட் நிலுக்ஷன், ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். அலோக பண்டார, நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் எச்.ஏ.சந்தன குமாரசிங்க, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகருமான துமிந்த ஹுலங்கமுவ போன்ற பல திணைக்கள அதிகாரிகள் தனது பிரேரணையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதிகாரிகளின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தை காட்சிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசாங்கம் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெறவில்லை என்பதன் அர்த்தம் என்ன என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

தேசத்தை அனுபவமற்றவர்களால் நடத்த முடியாது என்பதால் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இருப்பது மிகவும் அவசியமானது என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X