2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

“அரசாங்கம் மீதான அங்கீகாரத்தின் மதிப்பீடு உச்ச நிலை எட்டியது”

Editorial   / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெரிட்டேரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் 'தேசத்தின்மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 சத வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 சதவீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் (55%) இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’சிந்திக்கின்றனர். எனினும் மக்கள் தொகையில் 47 சதவீதமானவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையானது தற்போதும் ‘மோசமான நிலைமையிலேயே’ காணப்படுவதாக உணர்கின்றனர். இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் பதிவான 71 சதவீதத்தைவிடக்குறைவாகும்.  

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 2024 ஜூலை மாதத்திலிருந்து 2025 பெப்ரவரி வரையான காலப்பகுதியில், அங்கீகாரம் வழங்காத மக்கள் தொகை 60 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் (44 புள்ளிகள் குறைவு) குறைவடைந்துள்ளது. மேலும் இலங்கையின் பொருளாதாரமானது வீழ்ச்சிப்போக்கினை கொண்டுள்ளது என்ற நிலைப்பாட்டினை கொண்ட மக்களின் தொகையானது 65 சத வீதத்திலிருந்து 14 சத வீதமாகக் (51 புள்ளிகள் குறைவு) குறைவடைந்துள்ளது.

  1. அரசாங்கம் மீதான அங்கீகாரம் | அங்கீகரிப்பவர்கள் 62 %  அங்கீகரிக்காதவர்கள் 16%

"தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?" என்ற கேள்விக்கு, பதிலளித்தவர்களில் 62% பேர் அதை ‘அங்கீகரிப்பதாகக்’ கூறினர், இது முன்னைய 24 சதவீதத்திலும் பார்க்க இரண்டு மடங்கிற்கும் அதிகம். பதிலளித்தவர்களில் 16% பேர் மாத்திரம் இதை ‘அங்கீகரிக்கமறுத்தனர்’. இது முன்னைய ஆய்வில் 60 சதவீதமாக இருந்தது.

  1. பொருளாதாரம் மீதான கண்ணோட்டம்  55% ‘முன்னேற்றமடைகிறது’  14% ‘மோசமான நிலைமைக்கு செல்கிறது’

"ஒட்டு மொத்தமாக இலங்கையின் பொருளாதாரமானது முன்னேற்றமடைகிறதா அல்லது மோசமான நிலைக்கு செல்கிறதா?" என்ற கேள்விக்கு பதிலளித்த மக்கள் தொகையில் 55 சதவீதமானோர் ‘முன்னேற்றமடைகிறதாகப் ’பதிலளித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்த கணிப்பீடானது 30 சதவீத மாகப் பதிவாகியிருந்தது. இலங்கையின் பொருளாதாரமானது ‘மோசமான நிலைக்குச் செல்வதாக’ 14% பேர் மாத்திரமே கூறியுள்ளனர். இது முன்னர் 65 சதவீதமாக இருந்தது.

  1. பொருளாதார நிலவரம் – நல்லநிலை அல்லது சிறந்தநிலை 35%  மோசமானநிலை 47%  

இலங்கையின் பொருளாதார நிலவரமானது ‘நல்லநிலை’ அல்லது
‘சிறந்தநிலை’ அல்லது ‘ மோசமான நிலையினைக்’ கொண்டுள்ளதா என மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்ட போது 35 சதவீதமானோர், பொருளாதாரமானது ‘நல்லநிலை’ அல்லது ‘சிறந்தநிலைமையை’ கொண்டுள்ளது என தரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜுலை மாதம் 2024 ஆம் ஆண்டு 28% ஆகக்காணப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதனிடையே, இலங்கையின் பொருளாதாரமானது வீழ்ச்சியான போக்கினையே கொண்டுள்ளது எனவும் ‘மோசமான நிலையில்’ காணப்படுவதாகவும் 47% பேர் தரப்படுத்தியுள்ளனர். முன்னைய ஆய்வில் குறித்த பெறுபேறானது 71% ஆகக்காணப்பட்ட நிலையில் தற்போது 24% ஆகக்குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்பினை செயல்படுத்தல்:

வெரிடேரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு பகுதியாக இக்கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட்சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும். இச்செயற் கருவி இலங்கையர்களின் உணர்வுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

நாடளாவிய ரீதியில் தனித்தனி குடும்பங்களில் இருந்து வயது வந்த இலங்கையர்கள் 1,050 பேரைக்கொண்ட பல கட்ட சம வாய்ப்பு பதில் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு, 2025  ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் 2025  பெப்ரவரி 5 ஆம் திகதி வரை இந்தக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இக்கருத்துக்கணிப்பு 95% நம்பிக்கை இடைவெளியில் ±3.0% அதிகபட்ச மாதிரி பிழை வரம்பைக்கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்படுத்தும் செயன்முறையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இப்பிழை வரம்புகள் மேலும் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X