Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையே 5.4 கி.மீ தொலைவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் , இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய தசநாயக்க அலுத்கே அமில என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விபத்துக்குள்ளான கார் ஒன்றை லொறியில் ஏற்றிக்கொண்டு, அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையில் வைத்து லொறியின் முன்பக்க சக்கரம் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து தேவையான உதிரி பாகங்களை கொண்டு வரச் சொன்னதையடுத்து , உதிரி பாகங்களுடன் காரில் அந்த இடத்திற்கு சென்ற நண்பன் லொறியின் முன்பக்கத்திலிருந்து சிறிது தூரத்தில் காரை நிறுத்தி, லொறியின் ஓட்டுநர் முன் சக்கரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, லொறியின் இடதுபுறத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் அமர்ந்திருந்திருந்துள்ளார்.
அந்த நேரத்தில், மாத்தறையில் இருந்து வந்த ஒரு கார், லொறியின் முன் சக்கரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநர் மீது மோதி அவரை தள்ளிக்கொண்டு, முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் லொறியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகனத்தின் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் மகள் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேக போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் சம்பத் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில், பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் அசோக கருணாதிலக்க ,பொலிஸ் சார்ஜென்ட்14612 சம்பத் மற்றும் 13516 ரத்னசிறி ஆகியோர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago