2025 ஜனவரி 16, வியாழக்கிழமை

அதிகரிக்கும் மழை ; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

Freelancer   / 2025 ஜனவரி 15 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதேவேளை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மல்வத்து ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் சிறியளவான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X