2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான உதவியாளர் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .