Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் அபிநவராம விகாரையைச் சேர்ந்த 'அசேல' என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர் மதியம் கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யானைப் பண்ணையாளர் துஷார பிரியதர்ஷன பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தர்பூசணியை யானையிடம் கொடுக்க, அதனை தரையில் யானை கக்கிவிட்டது. யானையின் வாயில் இருந்து எச்சில் வடிந்ததால், அப்பகுதிக்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி ஆனந்த தர்ம கீர்த்தியை அழைத்து பரிசோதித்த போதே, விஷம் கலந்த தர்பூசணி கொடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. .
முன்னதாக யானைக்கு பொறுப்பாக இருந்த யானை பாதுகாவலர் சில முறைகேடுகள் காரணமாக நீக்கப்பட்டதாகவும், விஷம் கலந்த தர்பூசணியை யானைக்கு வழங்குமாறு அந்த நபர் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இதனைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
50 minute ago
1 hours ago