Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த அசேல என்ற யானைக்கு விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தர்பூசணி (Watermelon) காய்க்குள் விஷத்தை கலந்தே இந்த நபர் அசேல என்ற யானைக்கு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேறு சில சம்பவங்களுக்காக கண்டி பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையின் போது இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பில் கதிர்காமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து. அதிகாரிகள் குழுவை அனுப்பி சந்தேக நபரை அழைத்து வந்ததாகவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago