Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 12, புதன்கிழமை
Simrith / 2025 ஜனவரி 05 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மியான்மருக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு தனிநபர்களை அனுப்புவதைத் தடைசெய்யும் சர்வதேச மறுசீரமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் முஜீபுர் ரகுமான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கவலை தெரிவித்தார்.
அகதிகள் பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
ரகுமான், உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்க, இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்த இது இலங்கைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் எடுத்துரைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Mar 2025