Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 17 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கையின் அழகு உலகெங்கும் பரந்து காணப்படுகிறது. அதிலும் இலங்கையை பொறுத்தவரையில் இயற்கையின் படைப்பு மிகவும் பரந்து காணப்படுவது சிறப்பானதாகும். அந்த அழகினை ரசிப்பதற்காகவே ஏராளமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு படையெடுக்கின்றனர்.
அப்படி இயற்கையை ரசிக்க விரும்புகின்றவர்களுக்கு மன அமைதி தருகின்ற இடமாக விளங்கும் ஹோட்டல்தான் Maskeli Oya Family Park Resort. கொழும்பிலிருந்து ஹட்டன் செல்லும் வழியில் மஸ்கெலி ஓயாவில் அமைந்திருக்கிறது இந்த அழகிய ஹோட்டல். மலைநாடு என்பது மரங்கள் சூழ்ந்த பசுமையான பிரதேசம் என்பதை யாவரும் அறிவீர்கள். அந்த பசுமையினை அதன் அழகுகெடாமல் அற்புதமான இந்த ஹோட்டலினை வடிவமைத்திருக்கிறார்கள்.
கருங்கற்களினால் அலங்காரப்படுத்தப்பட்டிருக்கும் இக்ஹோட்டலினை சுற்றிவர உயர்ந்த மரங்களும் பசுமையான தேயிலை தோட்டங்களுமே இருக்கின்றன. இக்ஹோட்டலிலிருந்து சற்று தொலைவில் அழகிய ஆறொன்றும் பாய்கின்றது. இந்த ஆற்றினையும் நீங்கள் பார்வையிடலாம்.
Maskeli Oya Family Park Resort இல் 12 அறைகள் இருக்கின்றன. நவீனமுறையில் அமைக்கப்பட்ட இந்த அறைகள்கூட கலைநயம் மிக்கனவாகவே இருக்கின்றமை மனதுக்கு குளிர்மை தருகின்றது. மலையில் வழிந்தோடும் தூய்மையான நீரினைக்கொண்டு செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல்தடாகமும் இக்ஹோட்டலின் மற்றுமொரு சிறப்பாகும்.
Maskeli Oya Family Park Resort இலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவிலேயே சிவனொளிபாத மலை அமைந்திருக்கிறது. அதாவது சிவனொளிபாதமலையின் அடிவாரத்திலேயே இந்த ஹோட்டல் அமைந்திருக்கின்றது. இங்கு புதிதாக சில அறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. கபானா வடிவில் அமைக்கப்படும் இந்த அறைகளும் இக்ஹோட்டலின் அழகுக்கு மேலும் மெருகூட்டும் என்பதில் ஐயமில்லை.
மனதுக்கு குளிர்மையையும் உடலுக்கு ஓய்வையும் தரக்கூடிய இக்ஹோட்டலில் எல்லாவிதமான உணவுகளும் கிடைக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் உணவுகளை தயாரித்து வழங்குவதற்கும் தயாராகவே இருக்கிறார்கள். குறைந்தளவிலான கட்டணத்தில் நிறைவான சேவைகளை இவர்கள் வழங்கிவருவது சிறப்பு.
Maskeli Oya Family Park Resort இல் நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் +94 51 2232050, +94 714269517 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். ஒருமுறை இந்த ஹோட்டலுக்கு விஜயம் செய்யுங்கள், மனதினில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள். Pix: Waruna Wanniarachchi
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago