2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நிலவு சமவெளி...

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன்


நுவரெலியாவில் மக்கள் பார்வைக்காக இதுவரை  திறந்துவைக்கப்படாதிருந்த விதை கிழங்கு உற்பத்தி மையத்தில் காணப்படும் சந்ததென்ன (நிலவு சமவெளி)  தற்போது மக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களம், நுவரெலியா மாநகர சபை மற்றும் மத்திய மாகாண வர்த்தக வாணிப சுற்றுலா திணைக்களம் என்பன இணைந்து இதனை மக்களின் பார்வைக்கு திறந்து வைத்துள்ளன.

விதை கிழங்கு உற்பத்தி செய்யப்படுவதன் காரணத்தினால் மக்களின் நடமாட்டம் அதனை பாதிப்படைய செய்யலாம் என்ற காரணத்தினாலேயே இதுவரை மக்களின் பார்வைக்கு இவ்விடம் திறந்துவைக்கப்பட்வில்லை.

இந்நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள இவ்விடத்தை நுவரெலியா கிரகரி வாவியின் மாகஸ்தொட்டை முனையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட வாகனம் மூலம் சென்றடைய  முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடமானது சிறிய உலக முடிவு போல் காட்சி தருவதுடன் இலங்கையில் காணப்படும் உயரமான மலையான பீதுறுதாலகாலை உட்பட தொடுபொல, கிரகல்பொத்த, ஹக்கல, கிகிலியாமான, இசகஸ்கந்த, கிரேட்வெஸ்டன், நமுனுகுல, கொனிக்கல் ஆகிய ஒன்பது மலைகளையும் ஓர் இடத்தில் இருந்து கண்டுகழிக்க கூடிய இடமாக   காணப்படுகின்றது.







 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X