Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருள்ஷான்
கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹுப்பிடிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, எட்டியாந்தோ ட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கண்டி, கேகாலை மாவட்டங்களுக்கு இடையே, யக்தெஸ்ஸாவ வன பகுதியின் மலை அடிவார காட்டுப்பகுதியில் அமைந்திருப்பது கந்தலோயா தோட்டம் மேல் பிரிவுஆகும்.
இந்தத் தோட்டத்தை, ‘மேமலை’ எனவும் அழைப்பார்கள். இந்த மே மலை, கந்தலோயா தோட்டத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மேமலை பிரதேசத்தில் பல 100 வருடங்களாக 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்தத் தோட்டத்துக்குச் செல்வதற்கு, சரியான பாதை ஒன்று இல்லை. குறுக்குப் பாதை வழியாக, அடர்ந்த காட்டுக்கு ஊடாக மாத்திரமே, இந்தத் தோட்டத்துக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில், சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக, தோட்டம் மக்கள் கூறுகின்றனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக, இந்தத் தோட்டத்தில் இருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. வீடுகளில் வளர்க்கப்படும் பசு மாடுகள், ஆடுகள், நாய்களை இரவு நேரங்களில் சிறுத்தைகள் வந்து கொண்டு செல்வதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்தத் தோட்டத்து மக்கள், வேலைக்கு செல்லும் வழியில் சிறுத்தைகளின் நடமாட்டங்களை காண்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தோட்டத்தில் இருந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு எட்டியாந்தோட்டை நகருக்கு செல்வதாக இருந்தால், பஸ் எடுப்பதற்காக 20 கிலோமீட்டர் தூரம் நடைபாதை வழியாக, மேமலை தோட்ட மக்கள் சீபோத் சந்திக்கு செல்லவேண்டும். காலை 7.00 மணிக்கு பஸ் எடுப்பதற்கு இந்த தோட்ட மக்கள் அதிகாலை 5 மணிக்கே வீட்டிலிருந்து, மண்ணெண்ணெய் பந்தங்களை எடுத்துக்கொண்டு செல்லவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நகருக்கு சென்று, மீண்டும் சீபோத் சந்திக்கு வந்திறங்கி, மீண்டும் 20 கிலோமீட்டர் தூரம் காட்டுவழி ஒற்றைப்பாதையின் ஊடாக மே மலை தோட்டத்துக்கு செல்லும்போது, இரவு 8 மணி ஆகிவிடுன்றது என இந்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலை வசதி கூட இல்லாத இந்த மக்களுக்கு, அவசர மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதாக இருந்தால், நாவலப்பிட்டி நகருக்கு 35 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
அவ்வாறு செல்வதாக இருந்தாலும் 15 கிலோமீட்டர் தூரம் நடை பயணமாகச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த மே மலை தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கரவநெல்ல ஆதார வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் 48 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டியதாக இருப்பதாகவும் அதிலும் 20 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதாக, இந்தத் தோட்ட மக்கள் மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு, அடிப்படை வசதிகள் இல்லாமல் பல நூறு வருடங்களாக வாழ்ந்து வரும் இந்த மக்களின் அவல நிலையை அறிந்து, இங்கு வாழும் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல வசதியாக, கடந்த அரசாங்கத்தின் ஊடாக, இந்த மக்களிடம் 5,430 ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொண்டு, 25 வீடுகள் கந்தலோயா தோட்டத்தில் மத்திய பிரிவில் பாடசாலைக்கு அருகில் கட்டப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றம் காரணமாக, வீடுகளின் கட்டடம் பூரணப்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு கைவிடப்பட்ட வீடுகள் அரையும் குறையுமாக, கடந்த மூன்று வருடங்களாகக் காடுமண்டி, உடைந்து விழும் அபாயத்தில் உள்ளன. இந்த வீடுகளின் கட்டடங்களைத் திருத்தி, பூர்த்தி செய்து, நமக்குப் பெற்றுக் கொடுக்குமாறு, மே மலை தோட்ட மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago