2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தேவதைகள் தினம்

Johnsan Bastiampillai   / 2021 மார்ச் 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இனியா

எது அழகு என்பதில் தொடங்கி, அழகு குறித்த புரிதலின் அடிப்படையிலேயே அழகு அமைகிறது என்றவாறான கருத்துகள் ஆண், பெண் இருதரப்பினரிடமும் பார்க்க முடிகிறது.

பெண்களிடம் எப்போதும் புறஅழகை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண் மனதின் அழுக்குச் சிந்தனைகளை, ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால், பெண்களின் இயல்புதான் அவர்களின் அடையாளம் என்பதை,  பெண்கள் நினைத்தால் உணர்த்திவிட முடியும். 

அழகையும் அறிவையும் பெண்களின் இரண்டு கண்களாகக் கொள்ளமுடியும். அவளின் ஒவ்வோர் அசைவுகளும் ஆழமான ஆளுமையின் வெளிப்பாடுகள்தான்; அவை புதுப்புது அர்த்தங்கள் தருவன! அறிவார்த்தமானதும் மெளனமானதும் அழகானதும் ஆழமான சிந்தனையும் கொண்ட ‘தேவதை’க்கு என்றும் மதிப்புத்தான். 
தேவதையின் தடைக்கற்கள்

சுவாமி விவேகனந்தர் கூறுகின்றார், “பெண்களே! உங்கள் அழகை விமர்சிக்க, யாரும்விட வேண்டாம்.  அது, உங்கள் சுயமரியாதை. சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் பெண் சுதந்திரம் தான்”.

நமது சமூகம், பெண்ணை விமர்சிக்க எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும் தவறுவது கிடையாது. அதனால், பெண்கள் பின்வாங்கிச் செல்லும் அவலநிலையும் தொடர்கின்றது. அதையும் தாண்டிச் சாதிக்கும் பெண்கள், விடுதலை உணர்வுகொண்ட பெண்கள் ஆவார்.

தேவதையின் வரைவு இலக்கணம் என்ன? 

சிவப்பாக, கட்டழகியாக இருப்பவள்தான் அழகியா? இல்லை! மனதாலும்  வலிமையாலும் சுயசிந்தனையாலும் இலட்சியங்கள் பலவற்றை உள்வாங்கி, தன்னை அர்ப்பணித்துச் செயலில் வெற்றிவாகை சூடுபவள்தான், நாடமாடும் தேவதை. ‘பெண் நிமிர்ந்து நடந்தால் குற்றம்’ என்ற சமூக்கட்டமைப்பை உடைத்து, எண்ணற்ற பெண்களின் இழப்பு , தொடர் போராட்டம் காரணமாகத்தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமும் விடுதலையும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

பெண்ணைப் போகப்பொருளாகப் பயன்படுத்திய காலம் மாறி, பெண்கள் எதுசரி என நினைக்கிறார்களோ அதைச்செய்வதற்கும், எது பிழை என கருதுகிறார்களோ அதைச் செய்யமால் தவிர்ப்பதற்கும் இன்று கிடைத்திருக்கும் சுதந்திரம்தான் பெண் விடுதலை என்பதாகும். எதைச் செய்ய விருப்பம் இல்லையோ அதைச் செய்யமால் இருப்பது தான் உண்மையான சுகந்திரம்.

பல நூற்றாண்டுகளாகப் பெண்ணின் முடிவுகள், பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே இருந்தன. 21 நூற்றாண்டு அப்படியல்ல! கடினமான போராட்டத்துக்குப் பின்னரே, தான் நினைப்பதை முடிக்கும் நிலை உருவானது. இன்று, செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பத் தலைமை தாங்கியதும் பெண்தான். அதேவேளை, அவள் தனது கலாசாரம் பண்பாடு விழுமியங்களை கைவிட்டு விடாமல், திலகம் வைத்துத் ‘திலகவதி’யாக இருப்பதும் பெண் சுதந்திரம்தான். 
மகளிர் தினம் உருவாகிய விதம் 

ஆணுக்கு நிகரான ஊதியம் பெண்ணுக்கும் வேண்டும் என்ற போராட்டத்தின் போது, அமெரிக்காவில் 75 பெண்கள், பஞ்சு ஆலைத் தீவிபத்தில்  எரிந்து சாம்பராகினர். இதன் பின்னார் தான், ஆணுக்கும்பெண்ணுக்கும் சம்மான ஊதியம் என்ற சாசனம் நிறைவேற்றப்பட்டது. அந்த நாள் மார்ச் எட்டாம் திகதி. இத்தினத்தையே, மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

 இன்று, பெண்கள் தடம் பாதிக்காத துறைகள் எது என்ற கேள்வி கேட்கப்படும்போது, அதற்கான விடைகளைத் தேடிச் செல்லும்போது தான், சமூகத்தில் பெண்ணை மையப்படுத்திய சிந்தனைகளில் பலதும் பத்துமாகப் பலமடங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. 

பெண் வேண்டுவது எவற்றை? 

பெண்கள் பெரும்பாலும் விரும்புவது, பொன்னும் பொருளும் நகையும் நட்டும் காரும் பங்களாவும் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிற்து. ஆனால், உண்மை அதுவல்ல! தேவதை ஒருத்தி, தொடர்ந்தும் வலியுறுத்துவது தன்னை அங்கிகரிக்கும் இதயத்துக்காக மட்டுமே ஏங்குகின்றாள். 

எதைச் செய்தாலும் குறை காணும் நம் தமிழ்ச் சமூகத்தில் குடும்ப உறவுகள் மத்தியிலும் வேலைபார்க்கும் இடத்திலும் பெருந்தன்மை மிக்க மனநிலையில் இருக்கும் மனிதர்களைச் சந்திப்பது, பெரும் சாவாலாக உள்ளது.  இத்தகைய சாவால்களைத் தாண்டி, பெண்கள் ஜெயிப்பதற்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், அவளின் மனதைரியம், பொறுமையின் பாலாகவே அமைகின்றன. 

பெண்ணுக்கு பெண்ணே எதிரி

பெண்கள் பொறாமை உணர்வு கூடியவர்கள்; ஆதனால் ஒரு பெண், சகதோழியையோ, தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணையோ தனக்கு நிகராய் மதிப்பது குறைவு. பெண்கள் தங்களுடைய தகுதிகளைப்  பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த வேலை என்றாலும் அந்த வேலைக்கு எற்றால் போல், அதைப் பற்றிய நுண்ணறிவு வேண்டும். அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பிந்திய சேர்க்கைகள் அத்துப்படியாய் தெரிந்திருக்க வேண்டும். இவற்றின் மூலம் தான் உலகில் வெற்றியடையக்கூடிய சிறந்த நேர்வழில் பயணிக்க முடியும். 
சமூகத்துக்கு எது சரி, எது பிழை என்று சொல்லும் பாரிய பொறுப்பு, பெண்களின் கைகளில்த் தான் உள்ளது. 

குடும்பம் என்று வரும்போது, ஆணையும் பெண்ணையும் சமமாய் மதிக்கும் மனப்பாங்கை பெற்றோர்தான் வீட்டில் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆண், பெண்ணை மதிக்கும் பண்பை எல்லா இடத்திலும் , எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஆண்கள் பின்பற்றும் போது, பெண்களால் நிம்மதியாக வாழ முடியும். குடும்பத்தில் தொடங்கி, ஒவ்வோர் இடங்களிலும் பெண்ணை மதிக்க ஆரம்பிக்கும் நாள்தான், உண்மையான தேவதைகள் தினம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .