Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Mayu / 2024 ஜூலை 03 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
தான் சார்;ந்த மக்களுக்காக ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அரசியல் ரீதியாக குரல்கொடுத்துக் கொண்டும், போராடிக் கொண்டும் இருந்த் மூத்த தமிழ் தலைவர் இரா.சம்பந்தன் காலாமாகியுள்ளார்.
எந்தவொரு நபரும், பொருளும் இருக்கும் போது அதன் பெறுமதி அவ்வளவாக தெரிவதில்லை. அது இல்லாத போதுதான் உணரப்படும் என்பார்கள்.
அதுபோலத்தான் சம்பந்தன் வாழ்ந்த காலத்தில் எத்தனை பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தாலும், வரலாறும், ஆழ அகலங்களும் அறிந்த அந்த மூத்த தலைவர் இல்லாமல் போன வெற்றிடத்தை இலங்கை அரசியல் உணரச் செய்யலாம்.
1950 களில் தமிழரசுக் கட்சியின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்த இரா. சம்பந்தன்,1977ஆம் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவர் உட்பட கடைசி வரையும் பல பதவிகளை வகித்தார்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுவப்பட்ட போது தமிழரசு; கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா இருந்தார். இருப்பினும்,வடக்கை மையமாகக் கொண்ட ஒரு கட்சியில் கிழக்கு தமிழர்களையும் உள்வாங்கியதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஒரு உபாயத்தின் அடிப்படையிலோ என்னவோ திருமலைiயைச் சேர்ந்த இரா. சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது தமிழர் அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகும்.
தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலத்தில் இணைந்து கொண்டு,தமிழ் ஆயுதக் குழுக்கள் இருந்த காலத்திலும், யுத்த காலத்திலும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளுள் அமரர் இரா. சம்பந்தனும் ஒருவர் எனலாம்.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம்,அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் போன்ற ஜாம்பவான்களின் வழித்தடத்தில் பயணித்தவர் என்று இரா. சம்பந்தனை கூறலாம். அந்த தாக்கம் அவரிடம் கடைசி வரையும் இருந்ததை உன்னிப்பாக நோக்குவோரால் அறிய முடியும்.
அதாவது, ஒப்பீட்டளவில் விவகாரங்களை பக்குவமாக அணுகும் ஒரு கலையை அவரது வயதும் அனுபவமும் கற்றுக் கொடுத்திருந்தது எனலாம். தமிழ்த் தேசிய பற்றாளர்களும் தீவிர செயற்பாட்டாளர்களும் சம்பந்தன் தமிழ் சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்று விமர்சனங்களை முன்வைத்ததுண்டு.
அவர் இந்த சமூகத்திற்கு தன்னாலான எதையாவது செய்தார் என்ற யதார்த்தத்தை மறந்து விட்டு, முதுமையும் நோயும் இயலாமையும் வாட்டிக் கொண்டிருந்த 90 வயதில் அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் கவலைக்குரியவை. அவர் எம்.பி. பதவியை விட்டுத்தர வேண்டும் என்று கூட பகிரங்கமாகச் சொன்னார்கள்.
சம்பந்தன் தன் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அவர் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லi என்ற பாணியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அற்பத்தனமானவை.
எழுபது வயதிற்குப் பிறகு சாதாரண ஒரு குடும்பத் தலைவனே வீட்டு வேலைகளைக் கூட செய்ய முடியாமல் முடங்கி விடுகின்ற ஒரு காலகட்டத்தில், 90 வயது வரை எம்.பி.யாக இருந்து கொண்டு ஏதாவது அடிப்படையில் இயங்கிக் கொண்டிருப்பது என்பது வாயால் சொல்வது போல இலகுவான காரியமல்ல.
குறிப்பாக, தான் மரணிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்த அவர், இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்பதை உறுதிபட தெரிவித்திருந்தார்.
இந்த அரசியல், இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, முஸ்லிம் தலைவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய தமிழ் தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும். தமிழர்களின் பிரச்சினை மட்டுமே முக்கியமானது என்ற எண்ணத்தில் தீவிரமான அரசியலைச் செய்கின்ற கனிஸ்ட தமிழ் அரசியல்வாதிகள், மறைந்த சம்பந்தன் போன்றவர்களின் பக்குவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைந்துள்ளதுடன், தமிழரசுக் கட்சியும் பிளவுபட்டுள்ளது. சம்பந்தனின் இயலாமை உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில்தான் இதுவெல்லாம் நடந்திருக்கின்றது.
ஆகவே, ஏதோ ஒரு அடிப்படையில் சம்பந்தன் தனது இயங்குதலை குறைத்துக் கொண்ட பிறகு, தமிழர் அரசியல் கூட்டுப் பலத்தை இழந்திருக்கின்றது என்றும் கூறலாம்.
இதற்கு முன்னர் இந்தப் பக்கத்தில் வெளியாகிய பல பத்திகளில் மூத்த தலைவர் இரா. சம்பந்தனை தொடர்புபடுத்திப சில விடயங்களை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இந்த வயதிலும் சம்பந்தருக்கு இருந்த சமூகப் பற்றும் வேட்கையும். பக்குவமாகவும் யாரும் முகம் சுழிக்காத வகையிலும் விடயங்களை கையாளும் ஆளுமையும் வரலாற்று அறிவும் அவற்றுள் முக்கியமானவை எனலாம்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு தமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய தெளிவான புரிதலும். நிலைமாறாத நிலைப்பாடும் இருப்பதில்லை. சம்பந்தனை விட 25 வயது குறைந்த முஸ்லிம் தலைவர்கள் கூட சமூக விடயத்திற்காக சம்பந்;தனின் அளவுக்கு தைரியமாக தொடராகக் குரல் கொடுப்பதில்லை.
சம்பந்தன்ரூபவ் தமிழர் பிரச்சினையை கருத்தியல் ரீதியாக முன்கொண்டு சென்ற அளவுககேனும் முஸ்லிம்களின் பிரச்சினையை முன்கொண்டு சென்ற தலைவர் ஒருவர் எம்.எச்.எம்.அஷ்ரபிற்குப் பிறகு கிடையாது என்றே கூறலாம்.
சம்பந்தனின் மறைவு தமிழர் அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது ஒருபுறமிருக்கரூபவ் இன உறவின் தொன்மை அறிந்த மூத்த தமிழ் அரசியல்வாதியான இவரின் மறைவு தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் விட்டுச் செல்கின்றது என்றும் கூறலாம்.
தமிழ் - முஸ்லிம் உறவுக்கு ஒரு பெரும் வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது. அண்மைக்காலத்தில்,இரு பக்கத்தில் உள்ள அரசியல்வாதிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களும் இதனை தமக்கு விரும்பியவாறு புனைந்து வைத்திருக்கின்றனர்.
நிஜக் கதை என்பது அப்பாவியான தமிழ்,முஸ்லிம் தாத்தாக்களுக்கு தெரியும். ஆனால், அது இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை.
முஸ்லிம்களின் விருப்பு வெறுப்புகளை எஸ்.ஜே.வி. செல்வநாயகம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனாலேயே முஸ்லிம்களுக்கும் ஒரு உப தீர்வு கிட்ட வேண்டும் என்று தமிழரசுக் கட்சி அப்போதிலிருந்தே கூறி வருகி;ன்றது.
அந்த வழியில் வந்தவர்களாகவே இரா. சம்பந்தன், போன்ற மூத்த தலைவர்களை நோக்க முடிகின்றது. தமது கருத்துக்கள் ஏனைய சமூகங்களை காயப்படுத்தி விடக் கூடாது என்று மிக கவனமாக பேசுகின்ற பக்குவத்தை லரவாற்று அறிவும் பக்குவமும் அவர்களுக்கு வழங்கியிருந்தது.
முஸ்லிம்கள் தமிழர் அரசியலோடு இணைந்து செயற்பட்டார்கள், ஆயுத போராட்டத்திற்கு தார்மீக பங்களிப்புக்களை வழங்கினார்கள். ஆனால், புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களை முஸ்லிம்களை ஒடுக்கியாள தலைப்பட்ட பிறகுதான் முஸ்லிம்கள் இதனை எதிர்hத்தார்கள். அதில் நியாயமுள்ளது என்பதை இவ்வாறான தமிழ் தலைவர்கள் அறிந்திருந்தனர். .
அதேபோன்று முஸ்லிம்களின் பங்களிப்பை, தமிழ் - முஸ்லிம் உறவின் கதையை அறிந்த இளம் தமிழ் தலைவர்கள் மிகக் குறைவு. அல்லது இளைய அரசியல்வாதிகள் அதனையெல்லாம் மறந்தே அரசியல் செய்கின்றனர். இநேநிலைதான் கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகத்திலும் உள்ளது.
இன உறவின் பின்னணி புது அரசியல்வாதிகளுக்கம் தெரியாது. இளம் தமிழ் இளைஞர்களைப் போல, இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கும் பழைய உறவு பற்றிய கதைகள் கடத்தப்படவில்லை என்றே கூறலாம். கடந்த 10, 15 வருட நிகழ்வுகளை வைத்துக் கொண்டுதான் எல்லா விடயங்களும் நோக்கப்படுகின்றது.
இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் இரா.சம்பந்தனை 91 வயதில் இழந்திருக்கின்றோம். அந்த வகையில் ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதியை மட்டுமன்றி,அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள், ஆயுத குழுக்கள், சமூகங்கள் செய்த சரி,பிழை எல்லாவற்றையும் நன்கு அறிந்து வைத்திருந்த ஒரு மூத்த பிரஜையையும் நாம் இழந்திருக்கின்றோம்.
தமிழ் - முஸ்லிம் உறவின் தொன்மை என்ன, சிங்கள - தமிழ் உறவின் எல்லை என்ற வரலாற்றை அறிந்து அதனூடாக கடைசி வரையும் பக்குவமான ஒரு அரசியலைச் செய்த அமரர் சம்பந்தனின் வெற்றிடத்தை காலம் நிச்சயம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உணர்த்தும்.
02.07.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
46 minute ago
54 minute ago
2 hours ago