2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மிகச் சிறிய ஆசிரியர்?

Kogilavani   / 2013 மார்ச் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிகச் சிறிய ஆசிரியர் என 3 அடி உயரம் நிறைந்த அசாத் சிங் கருதப்படுகிறார்.

இந்தியா, ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணினித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார்.

அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய ஆடையை அணிபவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் 5 வயதாக காணப்படும்போது ஹார்மோன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது வளரச்சி தடைப்பட்டுள்ளது. குடும்பத்தின் வறுமைநிலைக்காரணமாக இவருக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸ் குழுவொன்றினால் தான் சிறுவயதிலே கடத்தப்பட்டதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணினித்துறை கற்பித்தல் ஊடாக இவர் தற்போது மாதம் ஒன்றுக்கு 10,000 இந்தியன் ரூபாய்களை வருவயாக பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் இவரை 'லிட்ல் ஸ்டார்'  என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

'நான் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் எப்போதும் எதை விரும்பினேனோ தற்போது அதை அடைந்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசாத் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது தாயார் பார்வதி தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • Faleel Sunday, 14 April 2013 12:51 PM

    சாதிக்க துணிந்தவனுக்கு தடை ஏது

    Reply : 0       0

    Faleel Sunday, 14 April 2013 12:52 PM

    நல்லம்

    Reply : 0       0

    prakash Tuesday, 14 May 2013 12:54 PM

    தலைவா க்ரேட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X