2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புலனற்ற மாணவன் மரதன் ஓடி சாதனை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில், விழிப்புலனற்ற மாணவன் ஒருவர் 8 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு சுன்னாகம் மருதனார்மடத்தில் இருந்து தெல்லிப்பழை வரையான 8 கிலோ மீற்றர் தூரத்தை இவர் எந்தவித தடையும் இன்றி தனது கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு ஓடி முடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் தனது பார்வையை இழந்த இந்த மாணவன், சுன்னாகம் வாழ்வகத்தில் கல்விகற்று வருகிறார்.

இவர் அந்தப்போட்டியில் பெருவிருப்போது பங்குபெற்றி ஏனைய மாணவர்களுக்கு தான் சளைத்தவன் இல்லை என்ற வகையில் இவர் தனது சாதனை நிலைநாட்டியுள்ளார்.




You May Also Like

  Comments - 0

  • mauran Friday, 01 February 2013 09:26 AM

    நல்ல சாதனை.

    Reply : 0       0

    Nallavan Friday, 01 February 2013 01:47 PM

    மனுசங்க‌ப்பா............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X