2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தேசிய கீதம் பாடி உலக சாதனை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான், லாகூரில் தேசிய ஹொக்கி மைதானத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் என 70,000 பேர் ஒன்று கூடி தேசிய கீதத்தை பாடினர்.
 
கின்னஸ் சாதனை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாப் இளைஞர் திருவிழா 2012 விழாக்குழு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 21,000 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியே கின்னஸ் சாதனையாக இருந்தது. இப்போது 70,000 பேர் கலந்துகொண்டு தேசியகீதத்தை பாடியுள்ளது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பாகிஸ்தானியர்கள் மனசாட்சியுள்ளவர்கள் என்று நிரூபித்து உள்ளோம் என்றும் கூறுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X