2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மிகப்பெரிய டென்னிஸ் மட்டை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 50 அடி நீளமான டென்னிஸ் மட்டையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் மிகப் பெரிய டெனிஸ் மட்டை என இது கருதப்படுகிறது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங்கை கௌரவப்படுத்தும் வகையில் இப்பிரமாண்ட டென்னிஸ் மட்டையை ஆஷ்ரிடா பர்மன் என்பவர் தயாரித்துள்ளார்.

ஒரு பஸ் அளவிலான இந்த டென்னிஸ் மட்டையானது 1970களில் பில்லி ஜீன் கிங்கினால் பயன்படுத்தப்பட்ட டென்னிஸ் மட்டையின் சாயலில் உள்ளது.

இந்த மட்டையின் கைப்பிடியானது மிகப்பெரியதாகும். சாதாரண ஒரு மனிதன் இக்கைப்பிடியை தனது கரங்களால் தழுவிப்பிடிப்பதும் மிகவும் கடினமானதாக அமையும்.

'உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எமது குழுவில் உள்ளனர் நியூஸிலாந்தை சேர்ந்த ஒருவர் உள்ளார். அவர் பலகை வேலையை முடித்துக்கொண்டுள்ளார்.  இதேபோல் தொழில்சார் வயலின் கலைஞர் ஒருவர் இந்த டென்னிஸ் மட்டையின் பின்னல்களை வடிவமைக்கிறார். மேலும்  ஜேர்மனை சேர்ந்த ஒருவர் பலகை தொடர்பான திட்டங்களை வகுத்துள்ளார்' என ஆஷ்ரிடா பர்மன் தெரிவித்துள்ளார்.

மேற்படி குழுவானது ஏற்கெனவே உலகின் மிகப்பெரிய பென்ஸிலை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X