Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 மே 19 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் உயிர்வாழும் அதி கூடிய வயதான நபராக பிரேஸிலைச் சேர்ந்த மூதாட்டியொருவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மரியா கோம்ஸ் வலன்டிம் என்ற இப்பெண்ணுக்கு 114 வயதாகிறது. இவர் 1896 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் திகதி பிறந்ததாக அவரின் பிறப்புச் சான்றிதழ் தெரிவிக்கின்றது.
ஏற்கெனவே உலகின் அதிக வயதான நபராக அறிவிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பெஸி கூப்பரைவிட இவர் 48 நாட்கள் மூத்தவர் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. பெஸி கூப்பர் அதே வருடம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தவராவார்.
மரியா கோம்ஸ் வலன்டிம் 1896 ஆம் ஆண்டு பிறந்தமைக்கும் 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்தமைக்கும் 1916 ஆம் ஆண்டு தனது முதலாவது மகனை பெற்றதையும் ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதுமையியல் துறை ஆய்வாளரான பிரேஸிலை சேர்ந்த பேராசிரியர் ஒருவரும் மரியா வலன்டிம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அவரின் வயதை உறுதிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலின் மினாஸ் ஜேராய் மாநிலத்தைச் சேர்ந்த மரையா வலன்டிம் 1946 ஆம் ஆண்டு கணவனை இழந்தார். அதன் பின் அவர் சக்கர நாற்காலியிலே தமது காலத்தை செலவிட்டு வருகின்றார். மிகச் சிறந்த உணவுப்பழக்கமே அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் கூறுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago