Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 10 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உலகில் மிகவும் குள்ளமானான மனிதரென அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சாதாரண போத்தலொன்றின் உயரத்தைவிட சற்று அதிக உயரத்துடன் காணப்படுகிறார்.
ஜன்றே பலவிங் எனும் இவரது உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே.
இந்த மிகச் சிறிய மனிதர் பிலிப்பைன்ஸின் சேம்பொங்கா டேல் பகுதியை சேர்ந்தவர். இவரது உயரமானது ஒரு வயது குழந்தையின் உயரத்தையே ஒத்தது. அதேவேளை இவர் 18 ஆவது பிறந்த தினத்தை ஜுன் மாதம் கொண்டாடும்போது புதிய உலக சாதனையாளராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படுவார். அப்போது அவர் தற்போதைய உலக சாதனையாளரைவிட 5 அங்குல உயரம் குறைவாக இருப்பார்.
ஜன்றேவினால் நடப்பதற்கு சிரமப்படும் அதேவேளை, நீண்ட நேரம் அவரால் நிற்கவும் முடிவதில்லை. ஆனால் அவர் தன்னை நினைத்துப் பெருமைபடுகின்றார்.
'நான்தான் இந்த உலகில் மிகவும் குள்ளமான மனிதனென்பது என்னை எப்போதும் கூலாக வைத்துக்கொள்கின்றது' என்று அவர் கூறியுள்ளார்.
அவருடைய தாய் கன்செப்சியன் (வயது 35) இது தொரடர்பாக தெரிவிக்கையில் 'அவர் இரண்டு வயதை அண்மிக்கும்போது அவரது வளர்ச்சியில் ஏதோ தவரொன்று நடப்பதை அவதானித்தேன். ஆனால் அவரை வைத்தியர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
'அவர் எப்போதும் நோய்வாய்ப்பட்டவாறு இருந்தார். அதேவேளை அவர் அவரது வயதிற்குரிய வளர்ச்சியையும் எட்டவில்லை. இதனை அவதானித்த நாங்கள் அவரை வைத்தியரிடம் அழைத்துக்கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் குழப்பினார்கள்' என்று அவர் தெரிவித்தார்.
ஜன்றே 12 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் அவரை மீண்டும் வைத்தியர்களிடம் அழைத்துக் கொண்டு சென்றது. ஆனால், அவர்கள் அதிகமான விற்றமின்களை எடுக்குமாறு மட்டுமே அறிவுறுத்தனர். ஆனால் அதைச் செய்வதற்கு அப்பெற்றோரிடம் நிதிவசதி இருக்கவில்லை.
'அவனுக்கு எனது அன்பு முழுமையாக தேவைப்பட்டது. எனது மற்ற பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது நான் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் அவனை நீங்கி என்னால் இருக்க முடியாது. அவனுக்கு என்னுடைய அரவணைப்பு ஒவ்வொரு நிமிடமும் தேவைப்படுகின்றது. அதனால் வேலைக்குச் செல்லும் திட்டத்தை விட்டுவிட்டேன்' என்கிறார் கொன்செப்சியன்.
'ஜன்றேவினால் பிறரின் உதவியுடன் நடப்பதற்கு முடியும். ஆனால் அவரால் நீண்ட நீண்ட நேரத்திற்கு நிற்பதற்கு முடியாது. ஏனெனில் அவருக்கு கால் வலி; காணப்படுகின்றது. ஆனால் அவன் தான் உலகில் மிக குள்ளமான மனிதன் என்று நான் கூறும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஆப்பேது அவன் முகத்தில் புன்னகை காணப்படும்' என கொன்செப்சியன் கூறுகிறார்.
தற்போது உலகின் மிகவும் குள்ளமான மனிதராக நேபாளத்தைச் சேர்ந்த கங்காதர தாபா மேகர் விளங்குகிறார். இவர் 26.4 அங்குல உயரமானவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago