2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தனிநபர் பயணிக்கும் ஒற்றை என்ஜின் விமானம்

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் “லிப்ட்” என்ற நிறுவனம், ஒரு நபர் மட்டுமே பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்து சாதனைப்படைத்துள்ளது.


ஒற்றை என்ஜின் கொண்ட “ஹெக்சா” என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் “லிப்ட்” என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த விமானம் ஒற்றை நபர் மட்டுமே பயணிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 196 கிலோகிராம் எடையை கொண்டுள்ள இந்த விமானம், தண்ணீரில் மிதக்கும் வகையிலும், அவசர காலத்தில் உயிர் பிழைக்க பாரசூட் உதவியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளமையால், ஆதலால் அடுத்த ஆண்டுக்குள் இந்த விமானத்தை செயற்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருகிறது.

மேலும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு, விமானிக்கான ஓட்டுநர் உரிமம் பெற அவசியம் இல்லை எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X