Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Editorial / 2017 மே 22 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் அதிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரெத்தை, இரண்டு தடவைகள் தொட்ட பெண் என்ற சாதனையை, இந்தியாவைச் சேர்ந்த அன்சு ஜெம்சென்பா (வயது 35) என்பவர் நிலைநாட்டியுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி, முதல்தடவையாக எவரெஸ்ட் மலையில் ஏறிய இவர், மலையின் 8,848 மீற்றர் உயரத்தை மட்டுமே அடைந்திருந்தார். தனது இலக்கில் திருப்தியடையாத அன்சு, மீண்டும் எவரெஸ்ட் மலை ஏறத் தொடங்கியதுடன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தனது இலக்கை இரண்டாவது தடவையாக அடைந்து முடித்துள்ளார்.
இதற்கூடாக குறுகிய கால இடைவெளிக்குள் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண் என்ற சாதனையை இவர் நிலைநாட்டியுள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த சியரிம் சோர்பா, கடந்த 2012ஆம் நிலைநாட்டியிருந்த சாதனையை, அன்சு முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago