2025 ஜனவரி 15, புதன்கிழமை

உலகின் மிக நீளமான சைக்கிள்

Editorial   / 2024 ஜூலை 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து 8 டச்சு பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். 180 அடி நீளமுள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் தயாரித்த 155 அடி நீளமுள்ள சைக்கிள் தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.

இந்நிலையில், இந்த சைக்கிள் தற்போது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த 39 வயதான இவான் ஷால்க் இது பற்றிக் கூறுகையில், தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்ததாகவும், அந்த கனவை இப்போது நனவாக்கியுள்ளமையையிட்டு பெரும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

மேலும், உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம், முதன் முறையாக 1965ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X