Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 17, திங்கட்கிழமை
Freelancer / 2024 மார்ச் 30 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அலகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு கே.பி.குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
23 minute ago
3 hours ago