2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

விவசாயிகளை சந்தித்தார் ஜனாதிபதி

Freelancer   / 2024 மார்ச் 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 4 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக சுதர்ஷன ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.

இந்த இளம் விவசாயிகள் தமது அறுவடையின் ஒரு பகுதியுடன் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

அத்துடன், வளமான விளைச்சலைப் பெறுவதற்கு வழிகாட்டி அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .