2025 மார்ச் 15, சனிக்கிழமை

வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர் மரணம்

Simrith   / 2024 மார்ச் 31 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

காது தொடர்பான மருத்துவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, பற்றீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட பொதுவாகப் பயன்படுத்தப்படும் அன்டிபயோடிக் 'கோ-அமோக்ஸிக்லாவ்' தடுப்பூசியை செலுத்திய பின்னர் காலமானார்.

சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை அறிந்து கொள்வதற்காக மருத்துவமனை மட்டத்தில் முழுமையான உள்ளக விசாரணையும் நடைபெற்று வருவதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர உறுதிப்படுத்தினார். 

இறப்புக்கான காரணம் நிச்சயமற்றதாக இருந்தாலும், தடுப்பூசிக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.

இந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளை ஆழமாக ஆராய அதிகாரிகளைத் தூண்டியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .