2025 மார்ச் 15, சனிக்கிழமை

வடக்கு நோக்கி நகரும் சூரியன் - காலநிலையில் பாரிய மாற்றம்

Freelancer   / 2024 ஏப்ரல் 05 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று (05) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில், சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று மதியம் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமஹாராம போன்ற இடங்களுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல், சபரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும், பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .