2025 மார்ச் 15, சனிக்கிழமை

எரிபொருள்களில் விலை குறைப்பு

Editorial   / 2024 மார்ச் 31 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 440 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 386 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 245 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .