2025 மார்ச் 15, சனிக்கிழமை

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை திருத்தியது பிரித்தானியா

Freelancer   / 2024 ஏப்ரல் 06 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா நேற்று (05) முதல் திருத்தம் மேற்கொண்டுள்ளது. 

அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய விடயங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தகவல்களை பிரித்தானியா மாற்றியுள்ளது. 

அதற்கமைய உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் காணப்பட்ட தகவல்கள் இந்த திருத்தப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் உள்ள சவால்களும் நீக்கப்பட்டுள்ளன.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .