2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

KFC க்கு பூட்டு

Janu   / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம்  ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகளால் மட்டக்களப்பு KFC நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது .

இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் நீதி மன்றத்தினால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் (22) திகதி வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எம். எஸ். எம். நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X