2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வேட்டைக்குச் சென்றவர் பலி; ஒருவர் கைது

Janu   / 2024 மார்ச் 13 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (12)   இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன்  , அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .