Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (03) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி பின் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பத்தையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது அதேவேளை லொறியின் முன் பகுதியும் மின்சார கம்பம் மற்றும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தின் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. பின்னர் மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுக்கின்றனர். மட்டக்களப்பு கல்முனை சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அப் பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பதிவாகின .
அப் பகுதியில் அதிக வளைவுகளான வீதி அமைந்து உள்ளதால் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும் தற்போது அடிக்கடி ஓரளவு மழை பெய்து வருவதாலும் மிகவும் அவதானமாக வாகனங்களை ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
6 hours ago
8 hours ago