2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Janu   / 2024 நவம்பர் 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி மியாங்குள - கொழும்பு வீதியில்  ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் பாறூக் என்பர், தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்குச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது எதிரே வந்த சிறிய  லொறி   (எல்ப) மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

எச்.எம்.எம்.பர்ஸான்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .