2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணம்

Janu   / 2024 மே 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - மெதிரிகிரிய வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (08)  இடம்பெற்றுள்ளது . 

கடந்த திங்கட்கிழமை அன்று மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  நபர் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளதுடன் அவரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (8) உயிரிழந்துள்ளார் .

ஓட்டமாவடி - பதுறியா நகரத்தை சேர்ந்த,  இரண்டு பிள்ளைகளின் தந்தையான நஸீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த நபருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஒன்று காணப்படுவதாகவும்  இந்த மரணம் விபத்தா அல்லது வேறு ஏதும் காரணமா ?  என்பது  தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .