Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 01 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மர ஆலை ஒன்றில் கனரக ெவாகனத்தில் இருந்து மரக்குற்றியை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட நபர் மீது மரக்குற்றி சரிந்து விழுந்ததில் வியாழக்கிழமை (29) இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ரசி குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
அவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தலையில் ஏற்பட்ட பாரமான விசையுடனான தாக்குதலால் ஏற்பட்ட பெருங்காயமமே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது .
மேலும் , உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025