2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புதிய கட்டிட திறப்பு விழா

Janu   / 2024 மே 16 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரங்குளி , கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி)  தலைமையில் சனிக்கிழமை (18)  காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் ஹேன்ட்ஸ் (Muslim Hands) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.எம். மிஹ்ழார், கௌரவ அதிதிகளாக  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முகம்மது அப்துல்லா அஹ்மத் பாரிஸ், அஷ்ஷெய்க் இஸட்.பீ.எம். அப்துல் ரஹ்மான் உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எம்.யூ.எம் சனூன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .