Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளருக்கு எதிராக மாணவர்கள் திங்கட்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நிந்தவூரில் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையததின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தையடுத்து, பொலிஸார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன், பெரிய பள்ளிவாசல் தலைவர், சமூக ஆர்வலர்கள் உள்ளுர் முக்கியஸ்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் ஆகியோரும்கு வந்து சுமுக நிலையை பேண நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கு பிரதிப் பணிப்பாளராக இடமாற்றத்தின் மூலம் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் நிர்வாக ரீதியாக தமக்கு அளவுக்கதிமான நெருக்குதலை வழங்குவதாகவும் இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தியோகத்தர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இங்கு கல்விபயிலும் மாணவர்கள் மீதான கெடுபிடிகளை அதிகரித்துள்ளதாகவும் மார்க்கக் கடமைகளுக்கு கூட அனுமதி வழங்காமல் செயற்படுவதாகவும் குறிப்பிட்டு, இப்பிரதேசத்தில் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டிருந்தது
இதனையடுத்தே, நேற்றையதினம் மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். தம்மை கடுமையான முறையில் குறிப்பிட்டபிரதிப்பணிப்பாளர் நடத்துவதாகவும், இன, மத பாகுபாடுகாட்டுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குறிப்பிட்டனர். எனவே அவரை இடமாற்றவேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த அமைதியின்மை குறித்து அறிந்த தொழிற்பயி;றிசி அதிகார சபை தலைவர் உடனடியாக தொலைபேசியூடாக மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்து மாணவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
35 minute ago
47 minute ago