2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சம்மாந்துறை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  கடந்த  பெப்ரவரி (27)   சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல மகளீர்  பாடசாலைக்கு அருகிலுள்ள  வீடு  உடைக்கப்பட்டு  13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததுடன் முறைப்பாடுக்கு அமைய பின்னர் மார்ச் மாதம் சனிக்கிழமை (1)  மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.குறித்த  சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தின் ஒரு தொகை  உட்பட வீடு உடைப்பதற்கு பயன்படுத்த உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

எனவே இவ்வாறான  சட்டவிரோத நடவடிக்ககைகளை தடுப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை  கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X