2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறை நாய்களுக்கு ARV தடுப்பூசி

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த   புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.

இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய  மாவட்ட மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் பங்கேற்று உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X