2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குரங்குகளினால் அசௌகரியம்

Mayu   / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வீட்டுக் கூரைகளின் மேலால் ஏறிப்பாய்வதால் தற்போதைய பருவமழை காலத்தில் நனைந்து ஈரத்தன்மையுடன் காணப்படும் ஓடுகள் உடைந்து

வீட்டின் உட்பகுதியில் விழுவதால் அதிக அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் பல்வேறு பயிர் வர்க்கங்களையும் கடித்து நாசமாக்கி வருவதாகவும் இதனால் குறைந்ந வருமானம் பெறுவோர் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குரங்குகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்த மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான் 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .