Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 10 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அதிக வெப்பம் கொண்ட காலநிலையினால் மலையக பிரதேசத்தில் மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றன.இது ஒரு புறம் இருக்க குடிநீர் இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக பல இலட்சம் ரூபாய் செலவு செய்து குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த பட்டாலும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது .
அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கு அமைவாக அரசாங்கம் அமைச்சினூடாக பெருந்தொகையான பணத்தை அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்கின்றனஅவ்வாறு ஒதுக்கீடு செய்கின்ற பணத்தில் உண்மையாக செலவு செய்யப்படுகின்றதா அல்லது ஏதோ ஒரு வகையில் ஊழல் இடம்பெறுகின்றதா என்பதை அவதானிப்பதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தால் கிராம சேவகர் பிரிவு க்கு ஏற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களின் பணியை நேர்மையுடன் செய்கின்றார்களா என்பதும் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. திட்டங்கள் வரும்போது அதை நடைமுறைப்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தி சங்க முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு நிதியை பெற்றுக் கொள்வதற்காக கையொப்பமும் எடுக்கின்றன. இச்சங்கத்தில் நூற்றுக்கு ஐந்து வீதம் என்ற அடிப்படையில் கமிஷன் வழங்கப்படுகிறது. ஆனால் சங்கம் முழு பொறுப்பையும் முறையாக செய்யாமல் கையொப்பம் இடுவதற்கு மாத்திரமே அதன் தலைவர் செயலாளர் பொருளாளர் செயல்படுகின்றனர்.
அதேவேளை எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் இறுதியாக பிரதேச செயலகத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே இவர்களின் பொறுப்பற்ற காரணமாக அதிகமான பிரதேசத்தில் செய்யப்படுகின்ற அபிவிருத்தி பணிகள் முறையாக இடம்பெறுவதில்லை என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
அக்கரப்பத்னை போட்மோர் தோட்டத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்த 81 குடும்பத்திற்கு 2019 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பழனி திகம்பரம் பணிப்புரைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.திடீரென ஆட்சி மாற்றத்தால் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக ஜீவன் தொண்டமான் அமைச்சு பொறுப்பை ஏற்றதோடு வீடுகள் அமைக்கும் பணியை அந்த அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
வீடுகள் முறையாக அமைக்கப்பட்ட போதிலும் இங்கு குடியேறும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான பல இலட்சம் ரூபா நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. நீர் குழாய்கள் நீர் தாங்கிகள் பொருத்தப்பட்ட போதிலும் இதுவரை அந்த குழாய்களில் மூலம் இவர்களுக்கு நீர் வழங்கப்படவில்லை. அதிக பணம் செலவு செய்து கட்டப்பட்ட நீர் தாங்கியும் பழுதடைந்து இடிந்து அதில் இருந்து நீர் கசிந்து வெளியேறுகின்றன.
குறித்த நீர் தாங்கியின் நீரினை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால். இங்கு வாழும் மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.81 வீடுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை 53 குடும்பங்கள் மாத்திரம் இதில் எவ்வித அடிப்படை வசதியற்ற நிலையில் புதிய வீட்டில் குடியேறியுள்ளனர்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு சகல வசதிகளை கொண்ட வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம் பெற்றதா என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் மனவேதனையுடன் கருத்துக்களை முன் வைத்தனர்.
துவாரக்ஷான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago