2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

காந்திபுரத்தில் காணி உரிமை

Janu   / 2024 ஜூலை 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, காந்திபுரத்தில் 157 குடும்பங்கள் கடந்த ஏழு தசாப்தங்களா (70 வருடங்கள்) காணி உரிமைகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்துவந்த நிலையில் அவர்களுக்கு காணி உரிமையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். 

காந்திபுரம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில்  தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார். 

இந்த விவகாரம்,  எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, முன்னுரிமை நடவடிக்கையாக நிரந்தர தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து தற்போது காணி உரிமையையும் பெற்றுக்கொடுத்துள்ளதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .