Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மே 28 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கானது திங்கட்கிழமை (27) மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை(22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது கணக்களார் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் மற்றும் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
43 minute ago