2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கடைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும்  இணைக்கின்ற  பாலத்தடியில்  இருந்து ஆண் ஒருவரின் சடலம்  செவ்வாய்க்கிழமை (20) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய முஹம்மது லெப்பை  முபாரக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (20) மாலை 5 மணி அளவில்  கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி வெளியே சென்றுள்ளதுடன் இரவு 7 மணி அளவில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X