2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

உதவித் தேர்தல்கள் ஆணையாளர் நியமனம்

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தின் புதிய உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்கள் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வியாழக்கிழமை(27) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, பின்னர் தனது முகாமைத்துவ பட்டத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பெற்றிருந்தார்.

நிர்வாக உத்தியோகத்தர் இவர் கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய உள்ளார். அதனையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்ட இவர் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவி செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் இந்த நியமனம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X