2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை

Janu   / 2024 மே 28 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள மாலை நேரக் கடைகள்  திங்கட்கிழமை (27) அன்று திடிர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

இதன் போது உணவு பாதுகாப்பு பல ஒன்றுகூடல்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு , கள பரிசோதனைகள் மூலம் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனை திருத்துவதற்கு  வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் குறைபாடுள் நிவர்த்தி செய்யாத 02 மாலை நேர சிற்றூண்டி நிலையங்களுக்கு ,உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உணவு கையாண்டமைக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகள் ஐ.எம்.றினூஸ் தெரிவித்துள்ளார் .

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீனின் ஆலோசனைக்கமைய மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

தீஷான் அஹமட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .