Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மே 05 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை - மல்வத்தையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 28 ஏக்கர் காணியில் ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளதாக, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.
மாகாண ஆயுர்வேத மூலிகை உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் மீள் உற்பத்தி திட்டத்தின் கீழ் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், ஆயுர்வேத, சுதேச வைத்தியர்களும் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக துறைசார் அதிகாரிகளும் சனிக்கிழமை (04) விஜயம் செய்து கள ஆய்வினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் எற்பாட்டில் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,இந்திய ஆயுர்வேத வைத்திய நிபுணர்களுடன் இணைந்து இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொது வைத்தியசாலையுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான திட்ட வரைபுகளும் முன்னொழியப்பட்டுள்ளதாவும், இலங்கையின் மூலிகை பயிர்களைப் பாதுகாப்பதுடன், கிழக்கு மாகாணத்திற்குத் தேவையான ஆயுர்வேத மருந்து உற்பத்தியையும் மேற் கொள்ள முடியும் , இம் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும் பட்சத்தில் சுகாதார சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்க முடியுமெனவும் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் , அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஒவ்வொரு ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான மூலிகைகள் பலவற்றை நடுகை செய்து அவற்றை மக்களுக்கு அறிமுகம் செய்து அதற்கான நாற்றுகளை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
3 hours ago