Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அரபுக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு , பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீண்டும் அரபுக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தால் பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கபடுவார்கள் என சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் விரிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை வழக்கு, விசாரணைகளுக்காக மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்றுக்கு ஆஜரான சம்மாந்துறை, காரைதீவு பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், பொலிஸார் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அரச அதிகாரிகள் சரியான முறையில் தமது கடமைகளை செய்ய தவறி விட்டார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் நிர்வாகத்தை உடனடியாக கலைத்து இடைக்கால நிருவாகத்தை தெரிவு செய்யுமாறு வக்பு சபைக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .